இந்திய ரிசர்வ் வங்கியானது ஓர் பொதுக் கடன் பதிவகத்தை (Public Credit Registry-PCR) அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. தனிநபர் மற்றும் பெருநிறுவன கடன்பெறுநர்களின் (borrowers) கடன் சார்ந்த தகவல்கள் தொடர்பாக தகவல் களஞ்சியமாக (Repository of information) இந்த பொதுக் கடன் பதிவகம் செயல்படும்.
இந்த முடிவானது இந்திய ரிசர்வ் வங்கியால் அமைக்கப்பட்ட M. டியோஸ்தலீ குழுவின் (Y.M. Deosthalee) பரிந்துரைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த குழுவானது 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தன் அறிக்கையை சமர்ப்பித்தது.
இந்தக் காப்பகமானது கடனைத் திரும்ப செலுத்தாத கடனாளிகள் (Bad borrowers) மற்றும் திரும்ப செலுத்துகிற கடனாளிகளை (Good borrowers) வேறுபடுத்திக் காட்டும். மேலும் அதன்படி வட்டி விகிதத்தை வழங்கும்.