TNPSC Thervupettagam

பொதுச் சுகாதார அவசர நிலை - டெல்லியில் காற்றின் தரம்

November 2 , 2019 1725 days 669 0
  • கடுமையான மாசு அளவானது ஐந்தாவது நாளாக தேசியத் தலைநகரப் பகுதியை (National Capital Region - NCR) தொடர்ந்து மூச்சுத் திணறச் செய்துள்ளதால் தில்லி அதிகாரிகள் பொதுச் சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளனர்.
  • சுற்றுச்சூழல் மாசு (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) ஆணையத்தின் (Environment Pollution (Prevention and Control) Authority - EPCA) தலைவரான பூரே லால் என்பவரின் கூற்றுப் படி, காற்றின் தரமானது இப்போது கடுமையான பாதிப்பு + என்ற நிலையில் இருக்கின்றது.
  • தீபாவளியிலிருந்துத் தேசியத் தலைநகரப் பகுதியில் நுண்மத் துகள்கள் 2.5ன்  செறிவானது (particulate matter - PM) மிகவும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.
  • மத்தியப் புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தரம் & வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி (SAFAR - System of Air Quality and Weather Forecasting and Research) அமைப்பின் படி, PM2.5ன் செறிவானது அதன் மிக உயர்ந்த அளவான 411 என்ற அளவைத் தொட்டுள்ளது.
  • காற்றுத் தரக் குறியீடானது (AQI - Air Quality Index) பின்னர் 484 (கடுமையான) மற்றும் 550 (கடுமையான+) என்ற நிலைகளை எட்டியுள்ளது.
  • காசியாபாத், நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் AQI ஆனது 688 என்ற “ஆபத்தான” நிலைக்கு உயர்ந்துள்ளது.
  • தில்லியின் மாசுபாட்டில் உயிரி எரிபொருளின் பங்கானது மதிப்பிடப்பட்ட 25%  அளவிற்கு மாறாக  46% என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.
  • பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் பயிர் எரிப்பானது அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்