பொதுச் செலவினங்களின் தரம் (QPE) குறித்தக் குறியீடு
February 24 , 2025 9 days 61 0
இந்திய ரிசர்வ் வங்கியானது, அரசாங்கம் தனது பணத்தை எவ்வளவு மிகச் சிறப்பாகச் செலவிடுகிறது என்பதை மதிப்பிடுவதற்காக என, 1991 ஆம் ஆண்டிலிருந்துப் பதிவான தரவுகளைப் பயன்படுத்தி 'பொதுச் செலவினங்களின் தரக்' குறியீட்டை உருவாக்கி உள்ளது.
இந்தக் குறியீடு ஆனது, செலவினங்களின் பல்வேறு அம்சம் மற்றும் ஒரு நீண்ட காலப் பொருளாதார வளர்ச்சியில் அதன் தாக்கத்தின் அடிப்படையில் பின்வருவனவற்றை மதிப்பிடுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூலதனச் செலவினங்கள் விகிதம் ஆனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான ஒரு அரசாங்கச் செலவினங்களின் விகிதத்தை அளவிடுகிறது.
வருவாய்ச் செலவினங்கள் மற்றும் மூலதனச் செலவின விகிதங்கள் ஆனது, அன்றாடச் செயல்பாட்டு சார் செலவினங்கள் மற்றும் நீண்ட கால முதலீட்டிற்கு இடையிலான ஒரு சமநிலையை மதிப்பிடுகிறது.
மொத்தச் செலவினங்களில் மேம்பாட்டுச் செலவின விகிதம் ஆனது சுகாதாரம், கல்வி, ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலனில் மேற்கொள்ளப்படும் சில பொதுச் செலவினங்களைக் கண்காணிக்கிறது.
மொத்தச் செலவினங்களின் சதவீதத்தில் மேம்பாட்டுச் செளவின விகிதம் ஆனது ஒரு ஒட்டு மொத்த அரசாங்கச் செலவினங்களில் உற்பத்தி முதலீடுகளின் ஒரு மொத்தப் பங்கை மதிப்பிடுகிறது.
அரசாங்கத்தின் மொத்தச் செலவின விகிதத்தில் வட்டித் தொகைகள் அரசாங்கத்தின் கடனின் அளவினைப் பிரதிபலிக்கிறது.