மகாராஷ்டிரா அரசு பொதுத் திரள் கொள்கையினை (Public Cloud Policy) வெளியிட்டிருக்கிறது. சேகரித்து வைக்கப்பட்டுள்ள தனது துறைகளினுடைய தகவல் திரட்டுக்களை இந்தத் திரளுக்குள் மாற்றிட வேண்டும் என்று கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளும் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இக்கொள்கையானது தகவல்களை பொது மக்களுக்கு இலவசமாகக் கிடைப்பதற்கு வழி வகை செய்கிறது.
இக்கொள்கையின் படி அரசு தகவல்களை நாட்டிற்குள் சேமித்து வைப்பதை உறுதி செய்கிறது.
எங்கெல்லாம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறையில் உள்ளதோ அங்கெல்லாம் இந்தப் பொதுத் திரளை பயன்படுத்த வேண்டும் என்பதே இதன் பரந்த நோக்கமாகும். மேலும் இந்தத் திரளுக்குள் சேமித்து வைக்கப் பட்டிருக்கும் தனியார் மற்றும் முக்கியத்துவம் பெற்ற தகவல்களின் பாதுகாப்பு அம்சங்களை செப்பனிடுதலும் இதன் முக்கிய நோக்கமாகும்.