TNPSC Thervupettagam

பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) மசோதா, 2024

February 13 , 2024 158 days 228 0
  • 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) மசோதாவானது, மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • பொதுத் தேர்வு முறைகளில் அதிக வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் நம்பகத் தன்மையை கொண்டு வருவதற்காக, "முறைகேடுகளை" தடுப்பதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மசோதாவின் 3வது பிரிவு ஆனது, பொதுத் தேர்வுகளில் "பணம் சார்ந்த அல்லது தவறான ஆதாயத்திற்காக" நியாயமற்ற வழிமுறைகளைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்சம் 15 செயல்களைப் பட்டியலிடுகிறது.
  • இந்த செயல்களில் பின்வருவன அடங்கும்:
    • வினாத்தாள் அல்லது விடைக்குறிப்பு அல்லது அதன் ஒரு பகுதி வெளியாதல் மற்றும் அத்தகைய வெளியாதல் மோசடியில் கூட்டு சேர்தல்
    • அங்கீகாரம் இல்லாமல் வினாத்தாள் அல்லது ஒளிக்குறி உணரிப் பதிலளிப்புத் தாளை அணுகுதல் அல்லது கையகப்படுத்துதல்”;
    • ஒளிக்குறி உணரிப் பதிலளிப்புத் தாள்கள் உள்ளிட்ட விடைத்தாள்களைச் சிதைத்தல்
    • பொதுத் தேர்வின் போது அங்கீகரிக்கப்படாத நபரால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்குதல் மற்றும்
    • பொதுத் தேர்வில் தேர்வர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவுதல்.
  • இந்த மசோதாவின் 9வது பிரிவு ஆனது, அனைத்து குற்றங்களும் பிடியாணையற்ற, பிணையில் வெளி வர முடியாத மற்றும் கூட்டுப்படுத்த முடியாத குற்றங்கள் என்று கூறுகிறது.
  • "முறைகேடுகள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் எந்தவொரு நபருக்கும் அல்லது நபர்களுக்கும்" மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப் படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்