TNPSC Thervupettagam

பொதுப் பயன்பாட்டு மின்சார வாகன மின்னேற்ற நிலையங்கள்- 2023

August 15 , 2024 100 days 142 0
  • 2024-25 ஆம் நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள பொது மின்சார வாகன மின்னேற்ற நிலையங்கள் 1.727 மில்லியன் அலகு (MU) மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளன.
  • 2024-25 ஆம் நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் இந்தியா முழுவதும் உள்ள பொது மின்னேற்ற நிலையங்களின் ஒட்டுமொத்த மின் நுகர்வு 113.58 MU ஆக இருந்தது.
  • தமிழ்நாட்டில் 163 பொது மின்னேற்ற நிலையங்கள் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1.032 MU மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ள அதே நேரத்தில் 154 பொது மின்னேற்ற நிலையங்கள் 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் 0.695 MU மின்சாரத்தைப் பயன்படுத்தி உள்ளன.
  • கோயம்புத்தூர், விழுப்புரம், திருநெல்வேலி, சென்னை வடக்கு மற்றும் வேலூர் ஆகியவை பொது மின்னேற்ற நிலையங்களை கொண்ட தமிழ்நாட்டின் சில முக்கியப் பகுதிகளாகும்.
  • 2023-24 ஆம் நிதியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள பொது மின்னேற்ற நிலையங்கள் 13.383 MU மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளன.
  • 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், பதிவான மின்சார நுகர்வு முறையே 1.438 MU மற்றும் 1.422 MU ஆக இருந்தது.
  • நாட்டில் விற்கப்படும் நான்கு சக்கர மின்சார வாகனங்களில் சுமார் 40% மற்றும் இரு சக்கர மின்சார வாகனங்களில் 70% ஆனது தமிழ்நாட்டிலேயே தயாரிக்கப் படுகின்றன.
  • டெல்லி (54.43 MU), மகாராஷ்டிரா (28.64 MU), குஜராத் (8.78MU) ஆகியவை பொது மின்னேற்ற நிலையங்களின் மின்சார நுகர்வு அடிப்படையில் முதலிடத்தில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்