பொதுமக்களிடம் புழக்கத்திலுள்ள பணத்தின் அளவு அதிகரிப்பு
May 25 , 2021 1282 days 581 0
பொது மக்களிடையே புழக்கத்திலுள்ள பணத்தின் அளவானது 35,464 கோடி அளவு உயர்ந்து எந்தக் காலத்திலும் இல்லாத அளவு உயர்வான 28.39 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
பெருந்தொற்று ஏற்பட்டதிலிருந்து கடந்த 14 மாதங்களில் பொது மக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஜுன் ஆகிய மாதங்களுக்கு இடையே ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டதன் காரணமாக பணப்பரிவர்த்தனைகளில் தேவை அதிகரித்ததால் மக்கள் வங்கிகளிலிருந்து அதிகளவில் பணத்தைத் திரும்ப எடுத்துள்ளனர்.
தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இதன் வேகம் குறைந்தது.
இருப்பினும் தொற்றுகளில் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இதன் வேகம் மீண்டும் அதிகரித்தது.
2016 ஆம் ஆண்டு நவம்பர் 08 ஆம் தேதியன்று பணமதிப்பிழப்பு அறிவிக்கப் பட்டதில் இருந்து இன்று வரை மக்களிடையேயான பணப்புழக்கமானது 58% வரை உயர்ந்து உள்ளது.