பொதுவாக புல்வெளிகளில் காணப்படுகின்ற பொன்தலை விசிறிவால் கதிர்க்குருவி (சிஸ்டிகோலா எக்சிலிஸ்) ஆனது, சமீபத்தில் கேரளாவின் இடுக்கியில் உள்ள மதி கெட்டான் சோலை தேசியப் பூங்காவில் தென்பட்டது.
இந்தக் கண்டுபிடிப்பானது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தென்மேற்குத் தொடர்ச்சி மலைகளில் முதன்முதலில் இந்தப் பறவை தென்படுவதைக் குறிக்கிறது.
முன்னதாக, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் வடக்கு கேரளாவின் சில பகுதிகளில் இந்தப் பறவை தென்பட்டது.
இந்தப் பறவையானது மிகப் பொதுவாக மலைத்தொடர்களில் உள்ள புல்வெளிகளில் காணப் படுகிறது.