பொய்யான சமுக நடைமுறை உறுதியளிப்புச் சந்தைப்படுத்துதல் அதிகரிப்பு
May 3 , 2023 574 days 249 0
நிலையான உணவு அமைப்புகளுக்கான சர்வதேச நிபுணர்கள் குழுவானது (IPES) ‘Who’s tipping the scales. என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, சர்வதேச உணவு நிர்வாகத்தில் பெருநிறுவனங்களானது நீண்ட காலமாக செல்வாக்கு செலுத்தி வருகின்றதோடு, அவற்றின் ஈடுபாடுகள் என்பது புலப்படும் வகை மற்றும் புலப்படாத வகை எனப் பல வழிகளிலும் வெளிப்படுத்தப் படுகின்றன.
உணவுப் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பெருநிறுவனங்களின் கூட்டாண்மைகளை உருவாக்கப்படும் போது நிறுவனங்கள் 'ப்ளூ-வாஷ்' அல்லது 'சோஷியல்-வாஷ்' எனப்படும் பொய்யான சமுக நடைமுறை உறுதியளிப்புச் சந்தைப்படுத்துதலினை மேற்கொள்ள அனுமதிக்கப் படுகிறது.
பொய்யான சமுக நடைமுறை உறுதியளிப்புச் சந்தைப்படுத்துதல் என்பது, உணவு முறைகள் மற்றும் நீர்நிலைகளின் நிலையான பயன்பாடு மற்றும் பாதுகாப்பை அடையும் வகையில் அவை செயல்படுவதாக நுகர்வோரை நம்ப வைப்பதற்காகப் பெரு நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒரு சந்தைப்படுத்துதல் தந்திரமாகும்.