TNPSC Thervupettagam

பொருநை அகழ்வாராய்ச்சி

September 13 , 2021 1076 days 3041 0
  • திருநெல்வேலியில் 15 கோடி செலவில் 'பொருநை அருங்காட்சியகம்' எனும் பெயர் கொண்ட  அருங்காட்சியகம் ஒன்றினை அமைக்க உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
  • திருநெல்வேலி மாவட்டம் சிவகளையில் ஒரு முதுமக்கள் தாழியில் மண்ணுடன் கூடிய நெல்மணிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • கரிமக் காலக் கணிப்பு முறையானது அதனை கிமு 1155 ஆண்டைச் சேர்ந்தது என்று கணித்துள்ளது.
  • இது தொடர்பான ஒரு சோதனை அறிக்கையை அமெரிக்காவின் மியாமியில் உள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகம் வெளியிட்டது.
  • இந்தக் கண்டுபிடிப்பானது பொருநை ஆறு (தாமிரபரணியின் பண்டையப் பெயர்) நாகரிகம் 3,200 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நிறுவியுள்ளது.
  • தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான காலம் இதுவேயாகும்.
  • இது 2,600 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் வைகை நதி நாகரிகத்தை விட மிகவும் பழமையானது ஆகும்.
  • கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியானது, கங்கை நாகரிகத்திற்குச் சமமான காலத்தில் வைகை ஆற்றங்கரையில் ஒரு நகர்ப்புற நாகரிகம் இருந்தது என்பதையும் காண்பித்துள்ளது.
  • சமீபத்தியக் கண்டுபிடிப்பானது விந்திய மலையின் தெற்கில் உள்ள நாகரிகங்களுக்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் இடையிலான இடைவெளியை மீண்டும் குறைத்துள்ளது.
  • முன்னர் தென்னிந்தியாவில் நகர நாகரிகம் எதுவும் இல்லை என்று நம்பப்பட்டது.
  • இந்திய துணைக் கண்டத்தில் முதல் நகரமயமாக்கல் சிந்து சமவெளி நாகரிகத்தில் நடந்தது.
  • இரண்டாவது நகரமயமாக்கல் மௌரியர் காலத்தின் முடிவில் கங்கைக் கரையில் நிகழ்ந்தது.
  • மௌரியர் காலத்திற்கு முன்பே, ஆதிச்சநல்லூரில் வெள்ளி நாணயங்கள் இருந்தன என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • ஆதிச்சநல்லூர், கொற்கை மற்றும் சிவகளை ஆகிய தளங்கள் அனைத்தும் தற்போது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பண்டைய பொருநை நதியின் (தாமிரபரணி ஆறு) ஆற்றங்கரையில் உள்ள தளங்கள் ஆகும்.
  • முன்னதாக, ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிமு 980 ஆம் ஆண்டிலும் கூட ஒரு நாகரிகம் செழித்து வளர்ந்தது என்று தெரிய வைத்தது.
  • ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை ஆகியவை ​​வாழ்விடங்களாக இருந்துள்ள அதே சமயம், கொற்கை துறைமுகமாக இருந்துள்ளது.
  • தமிழ் வேர்களைத் தேடி மற்ற மாநிலங்கள் மற்றும் மற்ற நாடுகளில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப் படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
  • முதற்கட்டமாக, கேரளாவில் பட்டணம் என்று அழைக்கப்படும் முசிறி என்ற ஒரு பழமையான துறைமுகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
  • இதே போன்ற ஆய்வுகள் ஆந்திராவின் வெங்கி, கர்நாடகாவின் தலைக்காடு மற்றும் ஒரிசாவின் பாலூர் ஆகிய இடங்களில் நடைபெறும்.
  • எகிப்தில் உள்ள பெர்னிகா அனெக்கே மற்றும்  குசேர் அல்-காதிம் ஆகிய இடங்களில் மாநிலத் தொல்லியல் துறை ஆராய்ச்சியினை நடத்தும்.
  • இது ஒரு காலத்தில் ரோமானியப் பேரரசின் ஒரு பகுதியாகவும் மேலும் ஓமனில் உள்ள கோர் ரோரி என்ற ஆட்சியிலும் இருந்தது.
  • இது அந்த நாடுகளுடன் தமிழர்களின் வர்த்தக உறவை ஏற்படுத்துவதற்காக வேண்டி அமைக்கப் பட்டது.
  • இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா மற்றும் வியட்நாம் போன்ற சோழ மன்னர் இராஜேந்திரன் ஆதிக்கம் செலுத்திய தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் ஆய்வுகள் நடத்தப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்