TNPSC Thervupettagam

பொருளாதார ஆய்வறிக்கை 2022

February 2 , 2022 900 days 949 0
  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்,  2021-22 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை 2022 ஆம் ஆண்டு  ஜனவரி 31 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
  • நிதிநிலை அறிக்கைக்கு முன்பாக சமர்ப்பிக்கப்படும்  பொருளாதார ஆய்வறிக்கை, தலைமைப் பொருளாதார ஆலோசகர் தலைமையிலான குழுவால் தயாரிக்கப் பட்டது.
  • இதனைச் சமர்ப்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக, பொருளாதார நிபுணர்  V. ஆனந்த நாகேஸ்வரனை புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆக மத்திய அரசு நியமித்தது.
  • 2022-23 ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 8-8.5 சதவீதமாக வளர்ச்சி அடைய உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
  • நடப்பு நிதியாண்டு 2021-22 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் ஆனது 9.2 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2025 ஆம் நிதியாண்டில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியை எட்டுவதற்கு, இந்தக் காலகட்டத்தில் இந்தியா சுமார் 1.4 டிரில்லியன் டாலர்களை உள்கட்டமைப்புக்காக வேண்டி செலவிட வேண்டும் என்று இந்தப் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
  • 2021-22 ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையின் கருத்துரு, “Agile approach” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்