நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், 2021-22 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
நிதிநிலை அறிக்கைக்கு முன்பாக சமர்ப்பிக்கப்படும் பொருளாதார ஆய்வறிக்கை, தலைமைப் பொருளாதார ஆலோசகர் தலைமையிலான குழுவால் தயாரிக்கப் பட்டது.
இதனைச் சமர்ப்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக, பொருளாதார நிபுணர் V. ஆனந்த நாகேஸ்வரனை புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆக மத்திய அரசு நியமித்தது.
2022-23 ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 8-8.5 சதவீதமாக வளர்ச்சி அடைய உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டு 2021-22 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் ஆனது 9.2 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2025 ஆம் நிதியாண்டில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியை எட்டுவதற்கு, இந்தக் காலகட்டத்தில் இந்தியா சுமார் 1.4 டிரில்லியன் டாலர்களை உள்கட்டமைப்புக்காக வேண்டி செலவிட வேண்டும் என்று இந்தப் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
2021-22 ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையின் கருத்துரு, “Agile approach” என்பதாகும்.