TNPSC Thervupettagam

பொருளாதார ஆய்வறிக்கை 2023-24

July 25 , 2024 124 days 285 0
  • பொருளாதார ஆய்வறிக்கை என்பது சமீபத்தில் நிறைவான நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் குறித்த விரிவான ஆய்வு அல்லது வருடாந்திர அறிக்கை ஆகும்.
  • ஏற்றுமதியைப் பாதிக்கும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 முதல் 7 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது.
  • 2024-25 ஆம் ஆண்டிற்கான கணிக்கப்பட்ட வளர்ச்சி மதிப்பானது, முந்தைய நிதி ஆண்டில் மதிப்பிடப்பட்ட 8.2 சதவீதப் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை விட மிக குறைவாக உள்ளது.
  • 2023 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீதமாக இருந்த நிதிப் பற்றாக்குறையானது 2024 ஆம் நிதியாண்டில் 5.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • மூலதனச் செலவினமானது வருடாந்திர அடிப்படையில் 28.2 சதவீதம் அதிகரித்து 2020 ஆம் நிதியாண்டின் அளவை விட 2.8 மடங்கு அதிகமாக 2024 ஆம் ஆண்டில் 9.5 லட்சம் கோடியாக இருந்தது.
  • 2023 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9% (அல்லது 10.5 லட்சம் கோடிகள்) ஆக இருந்த பயனுள்ள மூலதனச் செலவினமானது, 2024 ஆம் நிதியாண்டில் 4.2% ஆக உயர்ந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.5 லட்சம் கோடியாக இருந்தது.
  • 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளி நாட்டுக் கடன் மதிப்பு 18.7 சதவீதமாக உள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையின் படி, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் மொத்த கடன் விகிதம் 97.4 சதவீதமாக உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு அனுப்பப்படும் பண வரவானது, 3.7% அதிகரித்து 124 பில்லியன் டாலராகவும், 2025 ஆம் ஆண்டில் 4% அதிகரித்து 129 பில்லியன் டாலராகவும் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில் 3.8% ஆக இருந்த நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டின் (CFPI) அடிப்படையிலான உணவுப் பணவீக்கம் ஆனது 2023 ஆம் நிதியாண்டில் 6.6% ஆகவும், 2024 ஆம் ஆண்டில் 7.5% ஆகவும் அதிகரித்துள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில், உணவு தானிய உற்பத்தியானது 329.7 மில்லியன் டன்கள் என்ற வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி சற்று குறைந்து சுமார் 328.8 மில்லியன் டன்னாக உள்ளது.
  • மொத்தமுள்ள 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுள் 29 மாநிலங்களில் பண வீக்க விகிதம் 6 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்