பொருளாதார ஆய்வறிக்கை என்பது சமீபத்தில் நிறைவான நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் குறித்த விரிவான ஆய்வு அல்லது வருடாந்திர அறிக்கை ஆகும்.
ஏற்றுமதியைப் பாதிக்கும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 முதல் 7 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது.
2024-25 ஆம் ஆண்டிற்கான கணிக்கப்பட்ட வளர்ச்சி மதிப்பானது, முந்தைய நிதி ஆண்டில் மதிப்பிடப்பட்ட 8.2 சதவீதப் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை விட மிக குறைவாக உள்ளது.
2023 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீதமாக இருந்த நிதிப் பற்றாக்குறையானது 2024 ஆம் நிதியாண்டில் 5.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மூலதனச் செலவினமானது வருடாந்திர அடிப்படையில் 28.2 சதவீதம் அதிகரித்து 2020 ஆம் நிதியாண்டின் அளவை விட 2.8 மடங்கு அதிகமாக 2024 ஆம் ஆண்டில் 9.5 லட்சம் கோடியாக இருந்தது.
2023 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9% (அல்லது 10.5 லட்சம் கோடிகள்) ஆக இருந்த பயனுள்ள மூலதனச் செலவினமானது, 2024 ஆம் நிதியாண்டில் 4.2% ஆக உயர்ந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.5 லட்சம் கோடியாக இருந்தது.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளி நாட்டுக் கடன் மதிப்பு 18.7 சதவீதமாக உள்ளது.
2023-24 ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையின் படி, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் மொத்த கடன் விகிதம் 97.4 சதவீதமாக உள்ளது.
2024 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு அனுப்பப்படும் பண வரவானது, 3.7% அதிகரித்து 124 பில்லியன் டாலராகவும், 2025 ஆம் ஆண்டில் 4% அதிகரித்து 129 பில்லியன் டாலராகவும் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
2022 ஆம் ஆண்டில் 3.8% ஆக இருந்த நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டின் (CFPI) அடிப்படையிலான உணவுப் பணவீக்கம் ஆனது 2023 ஆம் நிதியாண்டில் 6.6% ஆகவும், 2024 ஆம் ஆண்டில் 7.5% ஆகவும் அதிகரித்துள்ளது.
2022-23 ஆம் ஆண்டில், உணவு தானிய உற்பத்தியானது 329.7 மில்லியன் டன்கள் என்ற வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி சற்று குறைந்து சுமார் 328.8 மில்லியன் டன்னாக உள்ளது.
மொத்தமுள்ள 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுள் 29 மாநிலங்களில் பண வீக்க விகிதம் 6 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது.