TNPSC Thervupettagam

பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 தமிழ்நாடு நிலவரம்

February 2 , 2025 20 days 165 0
  • காலணி உற்பத்தி மற்றும் இல்லம் தேடி கல்வி (வீடு தேடி கல்வி) ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான தமிழக அரசின் உத்தி சார் முயற்சிகளை 2024-25 ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிட்டு காட்டியுள்ளது.
  • பாரம்பரியத் தோல் பொருட்கள் உற்பத்தித் துறையில் தமிழ்நாடானது முன்னணியில் உள்ளது என்ற நிலையில் தற்போது தோல் பொருட்கள் அல்லாத காலணி உற்பத்தியின் வளர்ச்சியை ஆதரித்து வருகிறது.
  • இந்தியாவின் காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் நமது மாநிலம் 38% பங்களிக்கிறது மற்றும் இந்தியாவின் மொத்தத் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 47% பங்களிக்கிறது.
  • இந்தத் துறையானது சுமார் 2 லட்சத்திற்கு அதிகமான அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.
  • தமிழக மாநிலம் 2022 ஆம் ஆண்டு பிரத்தியேக காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கையினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் எண்ணிம இடைவெளியால் கல்வியில் ஏற்பட்ட ஒரு இடைவெளியைக் குறைப்பதற்காக இல்லம் தேடி கல்வி திட்டம் ஆனது தொடங்கப் பட்டது.
  • இந்த முன்னெடுப்பானது நேரடியாகச் சென்றடையும் முறைகள் மூலம் கல்வியில் கவனம் செலுத்துகிறது.
  • பெரிய மாநிலங்களுள், தமிழ்நாடு ஒரு நபருக்கு அதிகத் தொழிற்சாலைகள் கொண்ட தொகுப்பிலும் முன்னணியில் உள்ளது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்