TNPSC Thervupettagam

பொருளாதார ஆய்வறிக்கை 2025

February 2 , 2025 25 days 176 0
  • பொருளாதார ஆய்வறிக்கை என்பது இந்தியப் பொருளாதாரத்தின் ஒரு செயல்திறன், இந்திய அரசாங்கக் கொள்கைகள் மற்றும் வரவிருக்கும் நிதியாண்டிற்கான நிதியியல் கண்ணோட்டத்தின் சுருக்கமானத் தகவல்களை வழங்கும் ஓர் ஆவணமாகும்.
  • இந்தப் பொருளாதார ஆய்வறிக்கையானது தலைமை பொருளாதார ஆலோசகர் (CEA) தலைமையிலான பொருளாதாரங்கள் விவகாரத் துறையின் பொருளாதாரப் பிரிவால் தயாரிக்கப் படுகிறது.
  • 2025-2026 (FY26) ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஆனது 6.4 சதவீதமாக இருக்கும் என்று இந்த ஆய்வறிக்கை கணித்துள்ளது.
  • கடந்த நிதியாண்டில், கட்டுமானத் துறையில் அதிவேக வளர்ச்சிப் பதிவானது. பெருந் தொற்றுக் காலத்திற்கு முந்தையதாக இருந்த போக்கை விட சுமார் 15 சதவீதம் என்பது வளர்ச்சியடைந்துள்ளது.
  • 2025 ஆம் நிதியாண்டில் 6.4 சதவீதமாக இருந்த இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது பத்தாண்டு கால சராசரிக்கு அருகில் உள்ளது.
  • மொத்த கடன்கள் மற்றும் முன்பணங்களில் மொத்த வாராக் கடன்கள் ஆனது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • கிராமப்புற தேவையில் ஏற்பட்ட மீட்சியால் இந்தியோ பொருளாதாரத்தில் மொத்தத் தேவையானது 7.3 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (GFCF) (நிலையான விலையில்) ஆனது 6.4 சதவீதம் வளரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • வழங்கல் துறையில், உண்மையான மொத்த மதிப்புக் கூட்டல் (GVA) ஆனது 6.4 சதவீதம் வளரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • வேளாண் துறையானது 2025 ஆம் நிதியாண்டில் 3.8 சதவீதமாக மீண்டும் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2025 ஆம் நிதியாண்டில் தொழில்துறையானது சுமார் 6.2 சதவீதம் வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • சேவைத் துறையின் வளர்ச்சியானது சுமார் 7.2 சதவீதமாக வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2026 ஆம் நிதியாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி என்பது 6.3 முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும் என இந்த ஆய்வறிக்கை மதிப்பிட்டு உள்ளது.
  • 2017-18 ஆம் ஆண்டில் சுமார் 52.2 சதவீதமாக இருந்த இந்தியாவின் பணிநபர் வளத்தில் உள்ள சுயதொழில் செய்பவர்களின் சதவீதம் ஆனது 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 58.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • இந்திய நாடானது, 48 மணிநேரம் என்ற அதிகபட்ச அளவு வாராந்திர வேலை நேரத்தின் அடிப்படையில் ஜெர்மனி, வியட்நாம் மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய நாடுகளுக்கு இணையானதாக உள்ளது.
  • வாரத்திற்கு சராசரியாக 45 மணிநேர வேலை நேரத்துடன் மலேசியா இரண்டாவது இடத்தில் உள்ளது, அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • பள்ளி இடைநிற்றல் விகிதங்கள் ஆனது, சமீபத்திய ஆண்டுகளில் மிகப் படிப்படியாகக் குறைந்து, தொடக்கப் பள்ளிகளில் சுமார் 1.9 சதவீதமாகவும், மேல்நிலைத் தொடக்கப் பள்ளிகளில் சுமார் 5.2 சதவீதமாகவும், இடைநிலைப் பள்ளிகளில் 14.1 சதவீதமாகவும் உள்ளன.
  • இந்தியாவின் பள்ளிக் கல்வி அமைப்பானது, 98 லட்சம் ஆசிரியர்களுடன் 14.72 லட்சம் பள்ளிகளில் 24.8 கோடி மாணவர்களுக்கு கல்விச் சேவையை அளிக்கிறது.
  • 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் சுமார் 313 கிராம நியாயாலயங்கள் 2.99 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகளைத் தீர்த்து வைத்தன.
  • 2024 ஆம் நிதியாண்டில் 5.4 சதவீதமாக இருந்த சில்லறை விற்பனை சார் பணவீக்கம் ஆனது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில் 4.9 சதவீதமாகக் குறைந்தது.
  • இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2% ஆக இருந்தது.
  • 2017-18 (ஜூலை-ஜூன்) ஆம் ஆண்டில் 6.0 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 2023-24 (ஜூலை-ஜூன்) ஆம் ஆண்டில் 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டு ஜூலை - நவம்பர் ஆகிய காலக் கட்டத்தில் மூலதனச் செலவினம் ஆனது ஆண்டிற்கு 8.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • 2023 ஆம் நிதியாண்டில் சுமார் 42 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவிற்கான நிகர FDI வரவு ஆனது 2024 ஆம் நிதியாண்டில் 26.5 பில்லியன் டாலராகக் குறைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்