பொருளாதார மற்றும் வணிக ஆராய்ச்சி மையத்தின் இந்தியப் பொருளாதாரம் குறித்த கணிப்பு
December 31 , 2022 694 days 330 0
"உலகப் பொருளாதாரக் குழும அட்டவணை" என்பது பொருளாதார மற்றும் வணிக ஆராய்ச்சி மையத்தினால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் அறிக்கையாகும்.
இந்த அறிக்கையானது, உலகளாவிய மற்றும் தேசிய அளவில் நிலவும் பேரியல் பொருளாதாரப் போக்குகளை மதிப்பிடுகிறது.
இந்த அறிக்கையானது 191 நாடுகளுக்கான 2037 ஆம் ஆண்டு வரையிலான பொருளாதாரக் கணிப்புகளை வழங்குகிறது.
இந்திய நாடானது, 2037 ஆம் ஆண்டில் மூன்றாவது பொருளாதார வல்லரசு நாடாகவும், 2035 ஆம் ஆண்டில் 10 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட பொருளாதார நாடாகவும் மாறும் என எதிர்பார்க்கப் படுகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பது, ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 6.4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதற்குப் பிறகு, அடுத்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது சராசரியாக 6.5 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகப் பொருளாதாரக் குழும அட்டவணையில், தற்போது இந்த 2022 ஆம் ஆண்டில் 5வது இடத்தில் இருக்கும் இந்தியா, 2037 ஆம் ஆண்டில் 3வது இடத்திற்கு முன்னேறும் என எதிர்பார்க்கப் படுகிறது.