TNPSC Thervupettagam

பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசுக் கடன் – தமிழ்நாடு

May 11 , 2024 197 days 274 0
  • பொருளாதார நிபுணர் C. ரங்கராஜன் மற்றும் சென்னை பொருளாதாரக் கல்லூரியைச் சேர்ந்த K.R. சண்முகம் ஆகியோர், மாநிலப் பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ஆய்வினை மேற்கொண்டனர்.
  • தமிழ்நாட்டின் அரசுக் கடனின் வளர்ச்சி "எந்தவித பாதகமான பாதிப்பினையும் ஏற்படுத்த வில்லை "சாதகமான நிலையிலும் இல்லை".
  • இந்தத் தகவல் ஆனது பொதுக் கடன்-மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி விகிதம் உண்மையான பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்திய, ஆனால் "குறிப்பிடத்தக்க தாக்கமாக இல்லாத" 2005-06 முதல் 2022-23 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தினைக் குறிப்பாக கொண்டு கண்டறியப்பட்டுள்ளது.
  • இருப்பினும், எதிர்காலத்தில், "அதிக கடன் விகிதம் என்பது வளர்ச்சியை மோசமாகப் பாதிக்கலாம்" என்று எச்சரித்துள்ளது.
  • "கடன்-மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் உள்ள சரிவு வளர்ச்சியைத் தூண்டலாம்" என்பதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • கடந்த சில ஆண்டுகளில் பதிவான விகிதத்தின் பாங்கினைப் பகுப்பாய்வு செய்தால், 2016-17 ஆம் ஆண்டில் இந்த விகிதம் 20 சதவீதத்தினைத் தாண்டியுள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில் நிதிப் பொறுப்பு மற்றும் நிதிநிலை அறிக்கை மேலாண்மை (FRBM) மறு ஆய்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நிலையான நிலை இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்