வாஷிங்டன் D.C. நகரத்தில் அமைந்துள்ள தி ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன் என்ற ஒரு சிந்தனைக் குழுவினால் இந்தக் குறியீடானது வெளியிடப்பட்டுள்ளது.
சட்டத்தின் ஆட்சி, அரசாங்கத்தின் அளவு, ஒழுங்குமுறைச் செயல்திறன் மற்றும் தடை அற்றச் சந்தைகள் ஆகியவை இந்தக் குறியீட்டின் நான்கு முக்கியத் தூண்கள் ஆகும்.
இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்திலும், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சுவிட்சர் லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
இதில் இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகள் 121வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில் பூட்டான் சிறந்த செயல்திறனைக் கொண்டு இதில் 109வது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியாவிற்கு கீழே உள்ள தரவரிசையினைப் பெற்ற இதர மற்ற அண்டை நாடுகள் இலங்கை (131), ஆப்கானிஸ்தான் (146), பாகிஸ்தான் (152), சீனா (154), நேபாளம் (157) ஆகியனவாகும்.