TNPSC Thervupettagam

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு - 2018

October 11 , 2018 2140 days 603 0
  • ராயல் ஸ்வீடிஷ் அகாடெமியானது ஆல்ஃபிரெட் நோபலின் நினைவாக ஸ்வீரிகிஸ் ரிக்ஸ்பேங்க் வழங்கும் 2018ஆம் ஆண்டிற்கான பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசை வில்லியம் நார்த்ஹவுஸ் மற்றும் பால் M. ரோமெருக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
  • பொருளாதார வளர்ச்சியுடன் காலநிலை மற்றும் புத்தாக்கங்களை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றிற்காக இவ்விருதுக்கு இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • டாக்டர் நார்த்ஹவுஸ் ஒரு ஒருங்கிணைந்த மதிப்பீட்டு மாதிரியை உருவாக்கிய முதல் மனிதர் ஆவார். அதாவது, பொருளாதாரம் மற்றும் காலநிலை ஆகியவற்றிற்கிடையில் உலகளாவிய விளைவை விளக்கும் அளவுகோல் மாதிரியை உருவாக்குதல் என்பதாகும்.
  • டாக்டர் ரோமெர் உள்ளார்ந்த வளர்ச்சி கோட்பாட்டின் அடித்தளத்தை அமைத்துள்ளார்.
  • இந்த கோட்பாடானது, மற்ற பொருட்களுக்கு கருத்துகள் எவ்வாறு வேறுபடுகின்றன என்றும் சந்தையில் செழிப்படைய எந்தெந்த குறிப்பிட்ட நிபந்தனைகள் தேவை எனவும் விளக்குகின்ற கருத்தியல் மற்றும் நடைமுறை செயல்பாடு ஆகிய இரண்டையும் உடையதாகும்.
  • டாக்டர் நார்த்ஹவுஸ் மற்றும் டாக்டர் ரோமர் ஆகிய இருவருமே அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்