TNPSC Thervupettagam

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு – 2023

October 14 , 2023 262 days 388 0
  • 2023 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஆனது ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியை கிளாடியா கோல்டினுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • "பெண்களின் தொழிலாளர் சந்தை முடிவுகள் மற்றும் ஊதிய இடைவெளிகள் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தியதற்காக" இந்த விருது வழங்கப்படுகிறது.
  • கடந்த 200 ஆண்டுகளில் தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்களிப்பை அவரது ஆய்வு வெளிக்கொணர்ந்துள்ளது.
  • 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சுமார் 20 சதவீத பெண்கள் மட்டுமே வேலை வாய்ப்பினை பெற்றிருந்தனர் என்று கோல்டினின் ஆய்வு கண்டறிந்துள்ளது.
  • ஆனால், இதில் திருமணமான பெண்களின் பங்கு ஐந்து சதவீதம் மட்டுமே ஆகும்.
  • "திருமணம் சார்ந்த தடைகள்" எனப்படும் விதி பெரும்பாலும் திருமணமான பெண்கள் ஆசிரியர்களாக அல்லது அலுவலக ஊழியர்களாக வேலை செய்வதைத் தடுக்கிறது என்று கோல்டின் குறிப்பிட்டார்.
  • கோல்டினின் ஆராய்ச்சியானது பெண் தொழிலாளர் வளம், வருவாயில் உள்ள பாலினம் சார்ந்த இடைவெளி, வருமான சமத்துவமின்மை, தொழில்நுட்ப மாற்றம், கல்வி மற்றும் புலம் பெயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியது.
  • 2009 ஆம் ஆண்டில் எலினோர் ஆஸ்ட்ரோம் மற்றும் 2019 ஆம் ஆண்டில் எஸ்தர் டஃப்லோ ஆகிய இரண்டு பெண்களைத் தொடர்ந்து பொருளாதார அறிவியலுக்கான பரிசு மூன்றாவதாக கோல்டினுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஆனது 1895 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஆல்ஃபிரட் நோபல் பரிசின் ஒரு பகுதி அல்ல.
  • பொருளாதார அறிவியல் விருது ஆனது சுவீடனின் மத்திய வங்கியால் 1968 ஆம் ஆண்டில் தான் சேர்க்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்