பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கைகள்
March 25 , 2020 1710 days 516 0
கொரானா வைரஸ் தொற்று நோயின் காரணமாக மத்திய நிதித் துறை அமைச்சரான நிர்மலா சீதா ராமன் பல்வேறு முக்கியமான பொருளாதார நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.
முக்கியமான நடவடிக்கைகள்
வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.
மேலும், வணிகப் பரிமாற்றங்கள் மீதான டிஜிட்டல் கட்டணங்கள் குறைக்கப் பட்டுள்ளன.
பான் அட்டை மற்றும் ஆதார் அட்டை இணைப்பதற்கான கால வரம்பு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
விவாத் சே விஸ்வாஸ் என்ற திட்டமானது ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
சொத்து வரிச் சட்டம், வருமான வரிச் சட்டம், கறுப்புப் பணச் சட்டம், பினாமி பரிவர்த்தனைகள் சட்டம் மற்றும் விவாத் சே விஸ்வாஸ் ஆகியவற்றின் வரம்பானது ஜூன் 30 ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரித் தாக்கல், சப்கா விஸ்வாஸ் ஆகியவற்றுக்கான தாக்கல் தேதியானது மார்ச் 31ஆம் தேதிக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.