TNPSC Thervupettagam

பொற்பனைக் கோட்டை - வட்ட வடிவச் செங்கல் கட்டமைப்பு

August 15 , 2023 469 days 296 0
  • தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், வட்ட வடிவச் செங்கல் கட்டமைப்பின் ஒரு பகுதியினைப் பொற்பனைக் கோட்டையில் கண்டறியப்பட்டுள்ளது.
  • இது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சங்க காலத் தளம் ஆகும்.
  • மெருகூட்டப் பட்டப் பாத்திரங்கள், கறுப்பு மட்பாண்டங்கள், கருப்பு மற்றும் சிவப்பு மட் பாண்டங்கள், கூரை ஓடுகள், துளையிடப்பட்டப் பாத்திரங்கள் மற்றும் தனித்துவமான வேலைப்பாடுகள் கொண்ட ரோமானிய மட்பாண்டங்களின் மூன்று துண்டுகள் போன்ற பானை ஓடுகளும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
  • ரோமானிய மட்பாண்டங்களால் செய்யப்பட்ட ஒரு சில்லு விளையாட்டு அமைப்பானது இங்கு கண்டறியப் பட்ட ஓர் அரிய மற்றும் முக்கியமான கண்டுபிடிப்பாகும்.
  • இங்கு ஒரு சங்க காலக் கோட்டை இருந்ததாக நம்பப் படுகிறது.
  • 1.26 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்த ஒரு மேட்டுக் குடியிருப்பு பகுதியானது, இந்தக் கோட்டைக்குள் இருந்ததாக நம்பப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்