தமிழக மாநிலத் தொல்லியல் துறையானது, பொற்பனைக்கோட்டையில் அகழாய்வுப் பணிகளைத் தொடங்கியது.
இது கிராமத்தில் உள்ள ஒரு பழமையான கோட்டை குறித்தத் தகவல்களைக் கண்டறிய முயல்கிறது.
இத்தளமானது புதுக்கோட்டை நகருக்கு கிழக்கே 6.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
தமிழக மாநிலத் தொல்லியல் துறையானது இந்த ஆண்டில் அகழ்வாராய்ச்சிகளைத் தொடங்கியப் புதிய தளங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த பழங்கால நிலப்பரப்பில், 3 - 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நினைவு (நடுகல்) கல் வடிவில் உள்ள பழமையான கற்காலச் சான்றுகள் இந்தத் தளத்தில் கண்டறியப் பட்டு உள்ளன.
இது பூலாங்குறிச்சி கல்வெட்டின் சமகாலத்தியக் கல்வெட்டாக அறியப்படுகிறது.
இந்த நடுகல்லானது, மாவீரன் கனங்குமரனுக்காக எழுப்பப்பட்டது.
இவர் பொன்கொங்கர் விண்ணகோன் என்பவரால் இந்தக் கிராமத்தின் மீது நடத்தப் பட்ட கால்நடை வேட்டைத் தாக்குதலில் இறந்தச் சுற்றுப் படை வீரர் ஆவார்.
இந்தச் சிதிலமடைந்தக் கோட்டையானது கி.பி. 13-14 ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்டு இருக்கலாம்.