TNPSC Thervupettagam

பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு

May 25 , 2023 552 days 376 0
  • தமிழக மாநிலத் தொல்லியல் துறையானது, பொற்பனைக்கோட்டையில் அகழாய்வுப் பணிகளைத் தொடங்கியது.
  • இது கிராமத்தில் உள்ள ஒரு பழமையான கோட்டை குறித்தத் தகவல்களைக் கண்டறிய முயல்கிறது.
  • இத்தளமானது புதுக்கோட்டை நகருக்கு கிழக்கே 6.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
  • தமிழக மாநிலத் தொல்லியல் துறையானது இந்த ஆண்டில் அகழ்வாராய்ச்சிகளைத் தொடங்கியப் புதிய தளங்களில் இதுவும் ஒன்றாகும்.
  • இந்த பழங்கால நிலப்பரப்பில், 3 - 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நினைவு (நடுகல்) கல் வடிவில் உள்ள பழமையான கற்காலச் சான்றுகள் இந்தத் தளத்தில் கண்டறியப் பட்டு உள்ளன.
  • இது பூலாங்குறிச்சி கல்வெட்டின் சமகாலத்தியக் கல்வெட்டாக அறியப்படுகிறது.
  • இந்த நடுகல்லானது, மாவீரன் கனங்குமரனுக்காக எழுப்பப்பட்டது.
  • இவர் பொன்கொங்கர் விண்ணகோன் என்பவரால் இந்தக் கிராமத்தின் மீது நடத்தப் பட்ட கால்நடை வேட்டைத் தாக்குதலில் இறந்தச் சுற்றுப் படை வீரர் ஆவார்.
  • இந்தச் சிதிலமடைந்தக் கோட்டையானது கி.பி. 13-14 ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்டு இருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்