புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொற்பனைக் கோட்டை என்ற தளத்தில் நெசவு செய்வதற்கான கருவியாகப் பயன்படுத்தப்படும் ஒரு எலும்பு முனை மற்றும் ஒரு சிறிய உடைந்த தங்கத் துண்டு ஆகியவை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
குறிப்பிடத்தக்க வகையில், 2023 ஆம் ஆண்டில் அகழ்வாராய்ச்சியின் முதல் தொடரில் அந்த இடத்தில் மலர் வடிவமைப்பிலான ஒரு தங்கக் காதணியினைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்தனர்.
இதுவரையில், சில்லு விளையாட்டுக் கருவிகள், கண்ணாடி மணிகள் மற்றும் வளையல்கள், சோப்புக்கல்/நுரைக்கல் மணிகள், படிக மணிகள், இரும்பு ஆணிகள், சுடுமண் சக்கரம், அஞ்சனக்கல்லால் ஆன தண்டு, செப்பு நாணயங்கள், தேய்க்கும் கல் போன்ற 1,743 தொல்பொருட்கள் இந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.