TNPSC Thervupettagam

பொலிவியாவின் லித்தியம்

October 5 , 2019 1785 days 731 0
  • தென் அமெரிக்க நாடான பொலிவியாவானது உலகின் மிகப்பெரிய லித்தியம் இருப்புக்களைக் கொண்டுள்ளது. இது அங்கு பரந்த சலார் டி யுயூனி உப்பு தட்டுக்குக் கீழே உள்ளது.
  • உலகில் நான்கில் ஒரு பங்கு லித்தியத்தை பொலிவியா வைத்திருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
  • தற்போது லித்தியம் இன்றியமையாத ஒன்றாக உருவெடுத்துள்ளது. இது சிறிய மின்னணு மற்றும் மின்சார வாகனங்கள் போன்றவற்றிற்கான லித்தியம் அயன் மின்கலன்களில் பயன்படுத்தப் படுகின்றது.
  • 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பயணத்தின்  போது, லித்தியத்தின் வளர்ச்சி மற்றும் தொழில் துறை பயன்பாட்டிற்காக இந்தியா பொலிவியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • இது 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் லட்சிய இலக்கான 30 சதவீத மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் FAME (கலப்பு மற்றும் மின்சார வாகனங்களின் துரித உற்பத்தி மற்றும் ஏற்பு) என்ற கொள்கைக்கு உதவும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்