TNPSC Thervupettagam

பொலிவுரு நகரங்கள் திட்டம், இந்தியா : நிலையான மேம்பாட்டு இலக்குகளை உள்ளூர்மயமாக்குதல்

October 22 , 2023 273 days 158 0
  • இந்த அறிக்கையானது, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை-வாழ்விட அமைப்பு ஆகியவற்றால் இணைந்து தயாரிக்கப் பட்டுள்ளது.
  • உலகளாவிய நிலைத்தன்மை நோக்கங்களுக்காக என்று தேசிய பணித் திட்டங்களை உருவாக்குவதற்கான முதல் விரிவான முன்னெடுப்பு இதுவாகும்.
  • பொலிவுரு நகரங்கள் திட்டத்தின் (SCM) கீழான 70%க்கும் அதிகமான திட்டங்கள் ஆனது நகரங்கள், சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம், தூய்மையான ஆற்றல் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான மேம்பாட்டு இலக்குகளுடன் (SDGs) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
  • பொலிவுரு நகரங்கள் திட்டமானது சுமார் 8,000 திட்டங்களை உள்ளடக்கியது.
  • பொலிவுரு நகர திட்டங்கள் ஆனது 17 நிலையான மேம்பாட்டு இலக்குகளில் 15 இலக்குகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் பங்களித்துள்ளன.
  • நிலையான மேம்பாட்டு இலக்குகளில் சுமார் 44% ஆனது 11வது - நகரங்கள் மற்றும் மனித குடியிருப்புகளை உள்ளார்ந்த, பாதுகாப்பான, நெகிழ்திறன் மிக்க மற்றும் நிலையானதாக மாற்றுதல் - நிலையான மேம்பாட்டு இலக்குடன் இணங்கியுள்ளன.
  • பொலிவுரு நகரங்கள் திட்டங்களில் சுமார் 3.3% திட்டங்கள் 6வது நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கு (தூய்மையான நீர் மற்றும் சுகாதாரம்) பங்களித்துள்ளது.
  • 8.6% திட்டங்கள் 7வது நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கும் (மலிவு விலையிலான மற்றும் தூய்மையான ஆற்றல்) மற்றும் 6.4% திட்டங்கள் 8வது நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கும் (முறையான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி) பங்களித்து உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்