உலகின் மிகப்பெரிய திறந்தவெளி புத்தாக்க மாதிரியான பொலிவுறு இந்திய ஹக்கத்தான் 2019-ன் மூன்றாவது பதிப்பினை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் புது தில்லியில் திறந்து வைத்தார்.
இந்த நாடு தழுவிய புதிய முயற்சியானது நாம் அன்றாடம் சந்திக்கக்கூடிய சில பிரச்சனைகளை தீர்ப்பதற்காக மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட வாயில் ஆகும். இது பிரச்சனைகளை தீர்ப்பதற்கான மனப்போக்கை உருவாக்கும்.
இதை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், AICTE (All India Council for Technical Education), பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் மற்றும் i4c ஆகியவை இணைந்து நடத்துகிறது.
இது இரண்டு துணை பதிப்புகளைக் கொண்டது.
மென்பொருள் பதிப்பு - 36 மணி நேர மென்பொருள் உருவாக்குதல் போட்டி
வன்பொருள் பதிப்பு - 5 நாட்கள் வன்பொருள் உருவாக்குதல் போட்டி