TNPSC Thervupettagam

பொலிவுறு நகர திட்டததை செயல்படுத்த புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி டெவலப்மெண்ட் நிறுவனம் தொடக்கம் (SPV)

September 20 , 2017 2671 days 954 0
  • புதுவையில் பொலிவுறு நகரத் திட்டத்தை செயல்படுத்த புதுச்சேரி அரசு “ஸ்மார்ட் சிட்டி டெவலப்மெண்ட் லிட்” (SPV) என்ற நிறுவனத்தை அமைத்துள்ளது.
  • நிறுவனச் சட்டம் 2013ன் கீழ் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் என்று பதியப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி அரசும் நகராட்சியும் 50:50 பங்குதாரர்களாக இருந்து செயல்படுத்துவார்கள்.
  • இது 16 உறுப்பினர் கொண்ட இயக்குனர் குழுவாக செயல்படும். இதன் தலைவராக தலைமைச் செயலாளர் மனோஞ் பரிதா செயல்படுவார். இக்குழுவின் இயக்குனர்களில் நிதித்துறை செயலாளர்; உள்ளுர் நிர்வாகத் துறை, சுற்றுலாத்துறை, தகவல் தொழில் நுட்பத்துறை மின்துறை செயலாளர்களும் அடக்கம். நிறுவனத்துக்கான தலைமைச் செயல் அதிகாரியும் நியமிக்கப்பட இருக்கிறார்.
  • பொலிவுறு நகரத் திட்டத்தை, தயார்செய்து செயல்படுத்துவதற்கான தொழிநுட்ப உதவி மற்றும் திறன் வளர்ச்சியை மேம்படுத்தவும் AFD என்ற பிரஞ்சு இருதரப்பு வளர்ச்சி நிறுவனம் அளிக்கவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்