தமிழக மாநில அரசானது, 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் கேளிக்கை வரி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவினைச் சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது.
நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும் நிகழ்ச்சிகளில் 10% கேளிக்கை வரி விதித்திட என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திருத்தம் மேற்கொள்ளப் படுகிறது.
இதில் கல்வி நிறுவனங்கள் உட்பட எந்தவொரு நிறுவனத்தினாலும் நடத்தப்படும் இசைக் கச்சேரிகள், நாடகங்கள் மற்றும் பிற நிகழ்வுகளும் அடங்கும்.
தற்போது வரை, இது போன்ற நிகழ்வுகளில் கேளிக்கை வரி எதையும் விதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் எந்தவொரு விதிமுறையும் இல்லை.