TNPSC Thervupettagam

போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் மாசுபாடு

May 26 , 2019 2012 days 761 0
  • போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் காற்று மாசுபாடுகளுக்கு குழந்தைகள் உள்ளாகும் போது (TRAP - Traffic-Related Air Pollution - TRAP) TRAP – ஆனது குழந்தைகளின் மூளையில் உள்ள வேதியியல் பொருட்களை மாற்றியமைக்கும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
  • இது பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்ற மன நோய்களின் பாதிப்பை அதிகப்படுத்துகின்றது.
  • TRAP ஆனது வெளிப்புற காற்று மாசுபாட்டில், குறிப்பாக நகர்ப்புறப் பகுதிகளில் முக்கியப் பங்காற்றுகின்றது.
  • அமெரிக்காவில் உள்ள சின்சினாடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 145 குழந்தைகளின் (சராசரியாக 12 வயது) மூளையில் காணப்படும் “மையோ-இனோசிடோல்” என்பவற்றின் நிலைகள் குறித்து ஆய்வு செய்தனர்.
  • “மையோ-இனோசிடோல்” என்பது இயற்கையாகக் காணப்படும் ஒரு வளர்சிதைப் பொருளாகும். இது இணைப்பு உயிரணுக்கள் என்ற சிறப்புப் பெற்ற மூளை உயிரணுக்களில் காணப்படுகின்றது.
  • இது பின்வரும் பணிகளை மேற்கொள்கின்றது.
    • மூளையில் செல் தொகுப்பு மற்றும் திரவ சமநிலையைப் பராமரித்தல்
    • உடலில் உள்ள ஹார்மோன் மற்றும் இன்சுலின் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துதல்.
  • இந்த ஆராய்ச்சியின் சான்றானது காற்று மாசுபாட்டிற்கு மைய நரம்பு மண்டலம் குறிப்பாகப் பாதிக்கப்படும் என்று கூறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்