TNPSC Thervupettagam

போக்குவரத்து நெரிசல் குறியீடு 2019

February 1 , 2020 1631 days 947 0
  • வழிசெலுத்தல், போக்குவரத்து மற்றும் வரைபட பொருள்களை வழங்கும் நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு சர்வதேச அமைப்பான டாம் டாம் ஆனது 2019 ஆம் ஆண்டின் போக்குவரத்து நெரிசல் குறியீட்டை வெளியிட்டுள்ளது.
  • இந்தக் குறியீடானது போக்குவரத்து தொடர்பான தகவல்களைச் சேகரிப்பதற்காக இருப்பிடத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றது. இந்த அமைப்பானது ஒன்பது ஆண்டுகளாக நகரத் தரவரிசைகளை வெளியிட்டு வருகின்றது.
  • அதிக ஓட்டுநர்களுடன் உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க நகரமாக பெங்களூரு நகரம் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தக் குறியீட்டில் மும்பை (4), புனே (5), புது தில்லி (8) ஆகியவை இந்திய நகரங்களில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.
  • இந்தக் குறியீட்டில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மணிலா, கொலம்பியாவிலிருந்து போகோடா, ரஷ்யாவிலிருந்து மாஸ்கோ, பெருவைச் சேர்ந்த லிமா, துருக்கியிலிருந்து இஸ்தான்புல் மற்றும் இந்தோனேசியாவிலிருந்து ஜகார்த்தா ஆகியவை முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்