- இந்தியப் பெரு நகரங்களில் நாடு முடக்கப்பட்டதின் காரணமாக காலை மற்றும் மாலை ஆகிய போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில் ஏற்படும் மாசுபாடானது குறைந்துள்ளது.
- இது 2.5 மைக்ரானுக்கும் குறைவாக உள்ள நுண்மத் துகள் மாசுபாட்டை வெகுவாகக் குறைத்துள்ளது.
- மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் படி, நாட்டில் உள்ள 92 நகரங்கள் “திருப்திகரமான” நிலையிலிருந்துச் “சிறந்த” (Good) நிலையைப் பதிவு செய்துள்ளன.
காற்றுத் தரக் குறியீடு(AQI)
- AQI (Air Quality Index) ஆனது 0 முதல் 50 ஆக இருக்கும் போது காற்று மாசுபாட்டு நிலையானது “சிறந்ததாக” வகைப்படுத்தப் பட்டுள்ளது.
- மோசமான நிலை (201 – 300), மிகவும் மோசமான நிலை (301 – 400) மற்றும் கடுமையான நிலை (401 – 500) ஆகியவை பிற வகைப்பாடுகளாகும்.