TNPSC Thervupettagam

போக்சோ விரைவு நீதிமன்றங்கள்

September 6 , 2019 1910 days 692 0
  • தமிழ்நாடு சமூக நலத் துறையானது மூன்று சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான யோசனையை எழுப்பி இருக்கின்றது.
  • பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (POCSO - Protection of Children from Sexual Offences) சட்டம், 2012 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை இந்த நீதிமன்றங்கள் பிரத்தியேகமாகக் கையாளும்.
  • முன்மொழியப்பட்ட நீதிமன்றங்கள் சென்னை, தூத்துக்குடி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்குரியவை ஆகும்.
  • இதுபோன்ற 100க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் விரைந்து விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவதற்காக சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று இந்தியத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இதற்கு முன்பு பரிந்துரைத்திருந்தார்.
  • கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னையில் மட்டும் 300க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒட்டுமொத்தமாக 2,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்