TNPSC Thervupettagam

போங்கோசாகர் மற்றும் கார்பெட் கடற்படைப் பயிற்சி

October 8 , 2020 1419 days 564 0
  • இந்தியக் கடற்படை மற்றும் வங்கதேசக் கடற்படை ஆகியவற்றிடையேயான இருதரப்புப் பயிற்சியின் 2வது பதிப்பான போங்கோசாகர்என்ற பயிற்சியானது வங்காள விரிகுடாவின் வடக்குப் பகுதியில் தொடங்கியது.
  • போங்கோசாகர் பயிற்சியில், இரு நாடுகளைச் சேர்ந்த கப்பல்களும் கடற்படை வீரர்களின் பரிமாணங்கள் மற்றும் ஹெலிகாப்டர் நடவடிக்கைகள் போன்ற  கடல் மேற்பரப்பு நடவடிக்கைகளில் கலந்து கொண்டன.
  • போங்கோசாகர் பயிற்சியின் முதலாவது பதிப்பானது 2019 ஆம் ஆண்டில் நடத்தப் பட்டது.
  • இந்தப் பயிற்சியின் இந்த வருடத்திய பதிப்பானது முஜிப் பார்சோ எனப்படுகின்ற  அதாவது பங்கபந்து ஷேக்  முஜிபுர் ரகுமானின் 100வது பிறந்த தினத்தின் போது நடத்தப் படுவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
  • இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையேயான ஒருங்கிணைந்த கண்காணிப்புச் சேவையானது 2018 ஆம் ஆண்டில் தொடங்கியது.
  • இந்த 2 பிரிவுகளும் சர்வதேசக் கடல்சார் எல்லைக் கோட்டிற்கு அருகில் கூட்டுக் கண்காணிப்பை மேற்கொண்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்