போதை மருந்து சட்ட அமலாக்கத்தின் மீதான தேசிய மாநாடு
March 25 , 2018 2440 days 1145 0
2 நாட்கள் நடத்தப்படும் போதை மருந்து சட்ட அமலாக்கத்தின் மீதான தேசிய மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் போதை மருந்து தடுப்புப் பிரிவு நடத்தியுள்ளது.
மேற்கில் தங்க பிறை (Golden crescent), கிழக்கில் தங்க முக்கோணம் (Golden Triangle) ஆகிய உலகின் மிகப்பெரிய ஓப்பியம் (போதைப்பொருள்) உற்பத்தி செய்யும் மண்டலங்களை அருகில் கொண்டுள்ளதால் போதைப் பொருள் கடத்தலில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இந்தியா உள்ளது.
இம்மாநாடு இந்தியாவில் போதைப் பொருள் கடத்தலின் பரந்த சூழல் (Wider Context of drug trafficking in India), நிதியியல் புலனாய்வுகள் மற்றும் வெளிநாடு & சைபர் புலனாய்வுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
அரசின் நடவடிக்கைகள்
போதைப் பொருள் ஒருங்கிணைப்பு மையத்தை நவம்பர் 2016ல் அரசு அமைத்ததோடு, போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு நிதியியல் உதவியளிக்கும் திட்டத்திற்குப் புத்துயிர் அளித்துள்ளது.
2017-ல் ஏழு புதியப் பொருட்களை போதைப் பொருட்கள் பட்டியலில் மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா போதைப் பொருட்கள் தொடர்பாக ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மொசாம்பிக், தாய்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் 5 அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள் / புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளது.
போதைப் பொருள் தடுப்பு நிறுவனம், புதிய மென்பொருட்களைத் தயாரிப்பதற்காக நிதியளிக்கிறது. அதாவது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் தகவல்கள் மேம்பாட்டு அமைப்பை உருவாக்குதல். இவ்வமைப்பு போதைப் பொருள் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் பற்றிய முழு நேரடியான இணையதள தரவுத்தளத்தை உருவாக்கும்.
சட்டவிரோத போதைப் பொருள் கடத்தல் மற்றும் உளவியல் சம்பந்தமான பொருட்கள் கடத்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்காக ஏற்படும் செலவுகளை சந்திப்பதற்காக, போதைப் பொருள் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய நிதியம் ஒன்றை அரசு ஏற்படுத்தியுள்ளது.