TNPSC Thervupettagam

போன்டஸ் கண்டத்தட்டு

December 14 , 2023 219 days 238 0
  • தென்கிழக்கு ஆசியாவில் சுமார் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பழைய கண்டத் தட்டு ஒன்றை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • போன்டஸ் தட்டு என்று அழைக்கப் படும் கண்ட மேலோட்டின் துண்டுகள் போர்னியோ தீவு அருகே தென் சீனக் கடலில் கண்டுபிடிக்கப்பட்டன.
  • இந்தக் கண்டத்தட்டு ஒரு காலத்தில் சுமார் 15 மில்லியன் சதுர மைல் அளவு, அதாவது தோராயமாக பசிபிக் பெருங்கடலின் கால் பகுதியளவு இருந்ததாக கூறப்படுகிறது.
  • பாஞ்சியா என்ற பெருங்கண்டம் உடைவதற்கு முன், போன்டஸ் தட்டு புவியின் கண்ட மேலோட்டின் ஒரு பகுதியை உள்ளடக்கியிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ஆனால் அது கடந்த பல மில்லியன் வருடங்களில் பூமிக்கு அடியில் மூழ்கி விட்டது.
  • அது இருந்த காலத்தில் போன்டஸ் பெருங்கடல் எனப்படும் கடலின் அடியில் மூழ்கி இருந்ததால் இதற்கு " போன்டஸ் தட்டு" என்று பெயர் சூட்டப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்