அசாம் மாநில அரசானது, போபா காப்புக் காடுகளை வனவிலங்குச் சரணாலயமாக அறிவிக்க உள்ளது.
போபா காப்புக் காடு, அசாமின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மழைக்காடுகள் ஆகும்.
முன்மொழியப்பட்டுள்ள வனவிலங்குச் சரணாலயம் ஆனது போபா காப்புக் காடு, கபு சாப்ரி முன்மொழியப்பட்ட காப்புக் காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆற்றங்கரை பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
இந்த காட்டில் சுமார் 45 வகையான பறவைகள் மற்றும் ஊர்வன இனங்கள் காணப் படுகின்றன என்பதோடு மேலும் சியாங் மற்றும் லோஹித் போன்ற நதிகள் இங்கு சங்கமிப்பதால் இங்கு பல்வேறு வகையான மீன் இனங்கள் காணப்படுகின்றன.