யூனியன் கார்பைடு நிறுவனத்தின் நச்சுக் கழிவுகளின் சுமார் 10 டன் அடங்கிய முதல் தொகுதியை எரித்து அகற்றும் செயல்முறை ஆனது சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது.
போபால் எரிவாயு துயரச் சம்பவத்தின் 40 ஆண்டு பழமையான கழிவுகளை அப்புறப் படுத்துவதற்கான முதல் சோதனை ஓட்டத்தின் ஒரு பகுதியாகும்.
எரித்தல் அல்லது எரித்து அகற்றுதல் என்ற செயல்முறையானது நிறைவடைய சுமார் 72 மணி நேரம் ஆகும்.
பிதாம்பூரில் உள்ள சுமார் 358 டன் யூனியன் கார்பைடு கழிவுகளை அப்புறப்படுத்தும் மத்தியப் பிரதேச அரசின் திட்டங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்த சிறிது நேரத்திலேயே இந்த செயல்முறை தொடங்கியது.
1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற வாயுக் கசிவின் மிகவும் ஒரு சோக நிகழ்விலிருந்து, சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக போபாலில் உள்ள தற்போது செயல்படாத யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் (UCIL) தொழிற்சாலையில் இந்த இரசாயனக் கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன.