போபால் விஷவாயு துயரச் சம்பவம் நடைபெற்ற நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, யூனியன் கார்பைடு தொழிற்சாலை தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 337 மெட்ரிக் டன் இரசாயனக் கழிவுகளை அகற்றும் பணி தொடங்கியது.
மத்தியப் பிரதேசத்தின் பிதாம்பூரில் உள்ள ஒரு மையத்தில் இந்த அகற்றல் பணிகள் நடைபெறும்.
இந்த நச்சுக் கழிவுகளில் சுமார் 162 மெட்ரிக் டன் மண், 92 மெட்ரிக் டன் செவின் மற்றும் நாப்தால் எச்சங்கள், சுமார் 54 மெட்ரிக் டன் பகுதியளவுப் பதப்படுத்தப்பட்ட பூச்சிக் கொல்லிகள் மற்றும் 29 மெட்ரிக் டன் கொதிகலன் உலைக் கழிவுகள் அடங்கும்.
1984 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் தேதியன்று இரவு யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து மெத்தில் ஐசோசையனேடு (MIC) வாயு பெருமளவில் வெளியானது.
2015 ஆம் ஆண்டில், 10 டன் இரசாயனக் கழிவுகளை எரித்துச் சாம்பலாக்கும் சோதனை நடத்தப்பட்டது.