TNPSC Thervupettagam
April 24 , 2025 17 hrs 0 min 38 0
  • கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரும் வாடிகன் சிட்டி அரசின் இறையாண்மை கொண்ட தலைவர் போப் பிரான்சிஸ் சமீபத்தில் காலமானார்.
  • அர்ஜென்டினாவில் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ என்ற தனது பெயரில் பிறந்த பிரான்சிஸ், 2013 ஆம் ஆண்டில் முதல் கிருத்தவப் போப்பாகவும், இலத்தீன் அமெரிக்காவினைச் சேர்ந்த முதல் போப்பாகவும் பதவியேற்று இவர் மிகவும் புதிய வரலாற்றைப் படைத்தார்.
  • சுமார் 1,200 ஆண்டுகளுக்கும் மேலான நடைமுறையில் ஒரு ஐரோப்பியரல்லாத போப் ஆண்டவராக திகழ்ந்த முதல் முதல்  நபர் இவரே ஆவார்.
  • அவர் 1998 ஆம் ஆண்டில் பியூனஸ் அயர்ஸின் பேராயரானார் என்பதோடு 2001 ஆம் ஆண்டில் போப் இரண்டாம் ஜான் பால் அவர்களால் அதன் திருச்சபை அதிகாரியாக (கார்டினலாக) நியமிக்கப்பட்டார்.
  • போப் பத்தாம் பயஸுக்குப் பிறகு போப்பாண்டவர் குடியிருப்புகளுக்கு வெளியே வாழ்ந்த முதல் போப் இவர்தான்.
  • 2019 ஆம் ஆண்டில் அரேபியத் தீபகற்பத்தில் திருப்பலி நிறைவேற்றிய முதல் போப் பிரான்சிஸ் ஆவார்.
  • புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பை "மக்களின் கடமை" என்று அவர் கூறி, குடியேற்ற எதிர்ப்பு அரசியலை விமர்சித்தார்.
  • 2022 ஆம் ஆண்டில், கனடிய பழங்குடியின மக்களின் "கலாச்சார மற்றும் பெரும் இனப் படுகொலையில்" திருச்சபையின் பங்கிற்கு அவர் மன்னிப்பு கேட்டார்.
  • உலகளாவிய அளவில் மரண தண்டனையை ஒழிக்கும் நடவடிக்கையை ஆதரிப்பதாக பிரான்சிஸ் கத்தோலிக்கத் திருச்சபைக்கு உறுதியளித்தார்.
  • வாடிகானில் முன்னர் ஆண்கள் மட்டுமே வகித்த பல்வேறு பதவிகளுக்கு பெண்களை அவர் நியமித்தார்.
  • பதினெட்டாம் லியோவிற்குப் பிறகு, வாடிகனுக்கு வெளியே உடலடக்கம் செய்யப்பட உள்ள முதல் போப் இவரே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்