கர்நாடகாவின் பெங்களூருவில் புதிய அதிநவீன போயிங் இந்தியா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையம் (BIETC) வளாகம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது போயிங் சுகன்யா திட்டமும் தொடங்கப்பட்டது.
இந்தியா முழுவதிலும் இருந்து அதிக எண்ணிக்கையில் சிறுமிகளை நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையில் ஆர்வம் காட்டச் செய்து அத்துறையில் நுழையச் செய்வதை ஆதரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறைகளில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு முக்கியமான திறன்களைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை இந்தத் திட்டம் வழங்கும்.
இளம் பெண்கள் மத்தியில், STEM தொழில் துறைகளில் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக 150 திட்டமிடப்பட்ட இடங்களில் STEM ஆய்வகங்களை இந்தத் திட்டம் உருவாக்க உள்ளது.
இது விமானியாக பயிற்சி பெறும் பெண்களுக்கு உதவித்தொகையும் வழங்குகிறது.