TNPSC Thervupettagam

போர் ஆபத்து மருந்துகள்

March 12 , 2019 2086 days 613 0
  • புல்வாமா தீவிரவாதத் தாக்குதலைப் போன்ற போர்ச் சம்பவங்களின் போது ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்காக பல்வேறு வகையான போர் ஆபத்து மருந்துகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மருத்துவ ஆய்வகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது இரத்தம் வடிவதைத் தடுக்கும் பொருள், மிகச்சிறந்த உறிஞ்சுப் பொருட்கள் மற்றும் கிளிசரின் உப்புக் கரைசல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இது அடர்ந்த காடுகள் மற்றும் உயரமான பிரதேசங்கள் ஆகிய பகுதிகளில் ஏற்படும் போர்ச் சம்பவங்களின் போது நிகழும் உயிரிழப்புகளைக் குறைக்கிறது.
  • தக்க நேரத்தில் திறனுள்ள முதலுதவிகளை அளித்தால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் குறைவான உடல் இயலாமை ஆகியவை அதிகம் ஏற்படும் என்று இந்த மருந்துகளை வடிவமைத்தவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்