TNPSC Thervupettagam

போர்ட் பிளேர் தீவின் பெயர் மாற்றம்

September 18 , 2024 69 days 139 0
  • அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேர் இனி ‘ஸ்ரீ விஜய புரம்’ என அழைக்கப்படும்.
  • போர்ட் பிளேர் நகரம் ஆனது அந்தமான் நிக்கோபார் தீவுகளின் நுழைவுப் பகுதி ஆகும்.
  • இது கிழக்கிந்தியக் கம்பெனியின் பம்பாய் கடற்படையில் (மரைன்) பணியாற்றியக் கடற்படை அளவையாளர் மற்றும் லெப்டினன்ட் ஆர்க்கிபால்ட் பிளேயர் என்பவரின் நினைவாக இதற்கு இப்பெயரிடப்பட்டுள்ளது.
  • அந்தமான் தீவுகளை முழுமையான அளவில் நில அளவை ஆய்வு செய்த முதலாவது  அதிகாரி பிளேயர் ஆவார்.
  • 1771 ஆம் ஆண்டில் பாம்பே மரைனில் தாம் சேர்ந்த பிறகு, பிளேயர் அடுத்த ஆண்டில் இந்தியா, ஈரான் மற்றும் அரேபியாவின் கடற்கரைகளில் நில அளவைப் பணியை மேற் கொண்டார்.
  • 1778 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், எலிசபெத் மற்றும் வைப்பர் ஆகிய இரண்டு கப்பல்களுடன் கல்கத்தாவிலிருந்து அந்தமானுக்கு தனது முதல் நில அளவை ஆய்வுப் பயணத்திற்கு பிளேயர் புறப்பட்டார்.
  • அந்தமான் தீவுகள் 11 ஆம் நூற்றாண்டின் சோழப் பேரரசர் முதலாம் இராஜேந்திரனால் ஓர் உத்திசார் கடற்படை தளமாக பயன்படுத்தப்பட்டதாக சில வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
  • இன்றைய இந்தோனேசியாவில் இருக்கும் ஸ்ரீவிஜயா மீது தாக்குதல் நடத்த இது பயன் படுத்தப்பட்டது.
  • தஞ்சாவூரில் கி.பி.1050 தேதியிட்ட கல்வெட்டின் படி, சோழர்கள் இத்தீவை மா-நகவரம் நிலம் என்று குறிப்பிட்டனர் என்பதோடு இது ஆங்கிலேயர்களால் நிக்கோபார் என்ற நவீன பெயரை இட வழிவகுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்