வடகிழக்கு அசாமில் உள்ள ஒரு முக்கிய ஈரநிலத்தில் காணப் படுகின்ற பறவை இனங்களின் எண்ணிக்கை கடந்த 27 ஆண்டுகளில் சுமார் 72% குறைந்துள்ளது.
1997 ஆம் ஆண்டில் மொத்தம் 167 பறவை இனங்கள் அங்கு பதிவு செய்யப்பட்டன.
ஆனால் அந்தச் சரணாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட 18 மாத கால ஆய்வின் போது 16 வகைப்பாடுகளின் கீழ் 47 இனங்கள் மற்றும் 29 குடும்பங்கள் மட்டுமே கண்டறியப் பட்டன.
1997 ஆம் ஆண்டு முதல் இங்கு காணப்படும் பறவை இனங்களின் எண்ணிக்கையில் பதிவான வீழ்ச்சி 71.85% ஆக உள்ளது.
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது 41 குடும்பங்களைச் சேர்ந்த 133 வகையான பறவை இனங்கள் இந்தச் சரணாலயத்தில் பதிவு செய்யப்பட்டன.
133 இனங்களில், 86 பறவை இனங்கள் இங்கு நிரந்தரமாக வசிக்கின்றன என்பதோடு, 23 இனங்கள் வலசை போகும் பறவை இனங்கள் மற்றும் 24 இனங்கள் உள்நாட்டிலேயே வலசை போகும் பறவை இனங்களாக உள்ளன.
17 உள்நாட்டுப் பறவை இனங்கள் உட்பட சுமார் 950 வகையான பறவை இனங்களுடன் இந்தியாவில் பல்லுயிர்ப்பெருக்கம் நிறைந்த மாநிலங்களில் அசாம் மாநிலமும் ஒன்று ஆகும்.
இந்த மாநிலத்தில் 55 முக்கியமான பறவைகள் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கப் பகுதிகள் உள்ளன என்பதோடு அவை பல்வேறு பறவை இனங்களின் ஒரு பல்லுயிர்ப் பெருக்க மையங்களாக விளங்குகின்றன.