உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து தரையிலக்கை தாக்கும் போர்த்தந்திர ஏவுகணையான ‘பிரஹார்’ என்ற ஏவுகணையை DRDO ஒடிஷாவின் பாலசோரில் வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.
இது திட எரிபொருளால் இயங்கக்கூடிய தரையிலிருந்து தரையிலக்கைத் தாக்கும் குறுகிய தூர போர்த் தந்திர ஏவுகணையாகும்.
ஆறு ஏவுகணைகளை ஒரே நேரத்தில் கொண்டிருக்கக் கூடிய சாலை வழியே எடுத்து செல்லக்கூடிய அமைப்பிலிருந்து இதை ஏவ முடியும். மேலும் இதனை ஒரே நேரத்தில் செலுத்து தளத்திலிருந்து எல்லாத் திசைகளிலும் ஏவ முடியும்.
இது அமெரிக்காவின் MGM-140 இராணுவ போர்த் தந்திர ஏவுகணை அமைப்புடன் ஒப்பிடக்கூடியது ஆகும்.