TNPSC Thervupettagam

போர்த்திறன் சார்ந்த கூட்டாண்மை வழிகாட்டுதல்கள்

August 1 , 2018 2183 days 579 0
  • மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அமைந்த பாதுகாப்பு கையகப்படுத்துதல் சபை (Defence Acquisition Council - DAC) போர்த்திறன் சார்ந்த கூட்டாண்மை வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • உள்நாட்டு பாதுகாப்புக் கருவிகள் உற்பத்தியில் தனியார் துறையின் பங்களிப்பினை அதிகப்படுத்துவதற்கு இது ஒரு முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.
  • முக்கியத் தொழில்நுட்பம் மற்றும் உயர் உள்நாட்டு உள்ளடக்கம் ஆகியவற்றின் பரிமாற்றத்தினை ஊக்குவிப்பதற்கான வலியுறுத்தலுக்கு இந்த போர்த்திறன் சார்ந்த கூட்டாண்மை மாதிரி வழிவகுக்கிறது.
  • இம்மாதிரியின் நான்கு பிரிவுகள்
    • நீர் மூழ்கிக் கப்பல்கள்,
    • ஒற்றை என்ஜின் போர் விமானம்,
    • ஹெலிகாப்டர்கள் மற்றும்
    • ஆயுதமேந்திய போர் பீரங்கிகள்

ஆகியன  தனியார் துறைக்கு என்று குறிப்பாக ஒதுக்கப்பட்டுள்ளன.

  • இம்மாதிரியின் கீழ் வரும் அனைத்து கொள்முதல்களும் இதற்காகவே தனிப்பட்டதாக அமைக்கப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட திட்டக்குழுவினால் செயல்படுத்தப்படும். அதிக கவனம் மற்றும் சரியான நேரத்தில் செயல்படுத்துதல் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்