TNPSC Thervupettagam

போர்ப்ஸ் 30 வயதுக்கு உட்பட்ட 30 ஆசியர் 2018 பட்டியல்

April 3 , 2018 2583 days 863 0
  • போர்ப்ஸ் தனது மூன்றாவது வருடாந்திரப் பட்டியலான 30 வயதுக்கு உட்பட்ட 30 ஆசியர் என்ற வரிசையை வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் 30 வயதுக்கு உட்பட்டவராவர். இவர்கள் அனைவரும் இளம் புரட்சியாளர்கள், புதுமையாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் அடுத்த தலைமுறைக்காக புதிய விதிகளை மறுதிருத்தம் செய்பவர்களாகவும், வழக்கமான விதியை எதிர்ப்பவர்களாகவும் உள்ளனர்.
  • புரட்சி மற்றும் புதுமை என்ற கருத்துரு கொண்ட இவ்வருடப் பட்டியல் 300 தொலைநேக்காளர்களையும், புரட்சியாளர்களையும் கொண்டுள்ளது.
  • தங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக பாலிவுட் நடிகையும் தயாரிப்பாளருமான அனுஷ்கா சர்மா மற்றும் பேட்மின்டன் வீராங்கனைV. சிந்து இருவரும் போர்ப்ஸின் 30 வயதுக்கு உட்பட்ட 30 ஆசியர் என்ற இவ்வருடத்திற்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
  • இந்த பட்டியலின் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுத்துறைப் பிரிவில், கிரிக்கெட் வீரர் ஸ்மிருதி மந்தானா, தேசிய போலோ அணித்தலைவர் பத்மநாப் சிங் உட்பட நான்கு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • இந்த பிராந்தியத்தில், இந்தியா 65 பங்களிப்பாளர்களோடு முதல் இடத்திலும், சீனா 59 பங்களிப்பாளர்களோடு இரண்டாவது இடத்திலும் ஆஸ்திரேலியா 35 பங்களிப்பாளர்களோடு மூன்றாவது இடத்திலும் உள்ளன.
  • குறிப்பாக, வடகொரியா, பிஜி, அஜர்பைஜான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து முதல் முறையாக பங்களிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்