போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள 2018-ஆம் ஆண்டின் வணிகத்திற்கான சிறந்த நாடுகளின் (best countries for business) பட்டியலில் கடந்த ஆண்டு 5வது இடத்திலிருந்த இங்கிலாந்து முதன்முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சொத்துரிமை (Property rights), புத்தாக்கம் (Innovational), வரிகள் மற்றும் சிவப்பு நாடா (Red Tape) போன்றவற்றை உள்ளடங்கிய 15 காரணிகளின் அடிப்படையில் மொத்தம் 153 நாடுகள் இப்பட்டியலில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
இப்பட்டியலில் இந்தியா 62 வது இடத்தைப் பெற்றுள்ளது.
இங்கிலாந்தைத் தொடர்ந்து அடுத்த இரண்டு இடங்களில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.